ரெட் அலார்ட் எதிரொலி - நீலகிரியில் சுற்றுலா தளங்கள் மூடல்.!!
tourist place closed today in nilgiri for red alart
இன்று நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அத்துடன் அந்த மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் அதிக அளவு மழை பொழிந்தால், மண் சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது.
மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
English Summary
tourist place closed today in nilgiri for red alart