#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 28 பேர் பலி.! 
                                    
                                    
                                   Today tamilnadu covid stats 
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று 4,519ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 3,971 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
மேலும், இன்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 20,237 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இன்று 16,473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Today tamilnadu covid stats