தமிழகத்தில் இன்று குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Today local holiday to kanniyakumari district
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசிக் கொடை திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்தாண்டு மாசி கொடை திருவிழா இன்று நடைபெற உள்ளது. மாசிக்கொடை திருவிழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
மேலும், 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வரும் மே13ம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
English Summary
Today local holiday to kanniyakumari district