தேசிய கவிஞர்' திரு.ராம்தாரி சிங் தின்கர் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


தேசிய கவிஞர்' திரு.ராம்தாரி சிங் தின்கர் அவர்கள் பிறந்ததினம்!.

 நவீன இந்திக் கவிதை இலக்கியத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராகப் போற்றப்பட்ட தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிஹார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா கிராமத்தில் பிறந்தார்.

இவர் சர்தார் படேல் தலைமையில் பார்டோலியில் 1928-ல் நடந்த விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்ட வெற்றி குறித்து விஜய் சந்தேஷ் (வெற்றிச் செய்தி) என்ற தலைப்பில் 10 கவிதைகளை எழுதினார்.

 இவரது சம்ஸ்க்ருதி கே சார் அத்யாய் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், ஊர்வசி காவியத்துக்காக பாரதிய ஞானபீட விருதும் கிடைத்தது. இவர் பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கவிதை, உரைநடை, மொழிகள், இந்தி வளர்ச்சி என 4 துறைகளில் இவர் ஆற்றிய சேவைக்காக 4 ஞானபீட விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரபல கவிஞர் ஹரிவன்ஸ்ராய் பச்சன் புகழ்ந்துள்ளார்.

 புரட்சிக் கவிஞர், தேசியக் கவிஞர் என்று போற்றப்பட்ட ராம்தாரி சிங் தின்கர் 66-வது வயதில் 1974, ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று மறைந்தார்.


நவீன மனநல மருத்துவத்தின் தந்தை திரு.சிக்மண்ட் பிராய்ட் அவர்கள் நினைவு தினம்!.

 சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.

 பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்ததும், இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவற்றின் தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is the birth anniversary of the national poet Mr Ramdhari Singh Dinkar


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->