#Breaking: இன்று 4,526 பேருக்கு கொரோனா.. மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆகவும், பூரண நலனுடன் குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 92,567 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 2,032 ஆகவும் இருந்தது. 

இந்த நிலையில், இன்று கரோனாவால் 4,526 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4,743 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்துள்ளது. இன்று 67 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 78,573 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இன்று மேலும் 1,078 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,662 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today corona update from tn govt


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->