TNPSC க்ரூப் 2 தேர்வு இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு - தமிழ்நாடு தேர்வாணையம்.! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் குரூப்-2 தேர்வுகளுக்கான தேதி இன்று மதியம் 12:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 தேர்வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC group 2 exam date today announce


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->