நீட் தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வகுக்க கோரிய வழக்கு; தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 03-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தெரிய வந்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தேர்வை ரத்து செய்த தேசிய தேர்வு முகமை ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. பின்னர் வினாத்தாள் கசிவு தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 

அப்போது நீதிபதிகள் ''நீட் தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டே மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது வினாத்தாள் கசிந்தது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலைக்கு தள்ளிவைத்துள்ளது'' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court dismisses case seeking the formulation of guidelines regarding the NEET exam


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->