டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு: 645 பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்!
TNPSC Group 2 announce 2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்–2 முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த தேர்வு நடைபெறுகிறது. முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூலை 15) முதல் தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை tnpsc.gov.in இணையதளத்தில் ஏற்கப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் குறித்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
English Summary
TNPSC Group 2 announce 2025