பேசி தீர்வு காணலாம் : தமிழநாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்த போராட்டம் வேண்டாம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்து,  2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த 81 மாதங்களாக ஓய்வு ஊதியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு  வழங்கப்பட வேண்டும். தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு இதற்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, அனைத்து மண்டலப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களிலும் ஏஐடியுசி சார்பில் வரும் ஆக. 3-ம் தேதியோ அல்லது அதற்குப் பின்னரோ ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 19-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். 

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்தம் தொடர்பாக அளித்த மனுவில் இடம்பெற்ற கோரிக்கைகள் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், பொதுமக்களால் பயன்படுத்தப்படும் சேவையாகும். எனவே, வேலைநிறுத்தம் செய்யாமல் பேச்சுவார்த்தையின் முடிவை எதிர்நோக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt transport staff protest issue aug 3


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->