அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - பிரச்சனையை சுமுகமாக முடித்த தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள்  தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை குரோம்பேட்டை பணிமனையில் ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் 66 தொழிற்சங்கங்களுடன் 7 கட்டங்களாக  பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனை தொடர்ந்து, இன்று சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் முக்கிய திருத்தமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பது தற்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 என்றும் அதிகபட்சமாக ரூ. 7,981 ஆகவும் உயர்த்தப்பட்டு கையெழுத்தானது. இதனை போன்றே, நடத்துநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 1,965 என்றும், அதிகபட்சம் ரூ. 6,640 ஆக உயர்த்தப்பட்டு கையெழுத்தானது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Transport Staff issue


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->