அசாம் மாநிலம், நாகோன் பகுதியில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்..!
Earthquake in Nagaon region of Assam
அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.57 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.23 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாவில்லை. இவ்வாறு அசாமில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
Earthquake in Nagaon region of Assam