ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தே அப்டேட் செய்யும் புதிய வழிமுறை விரைவில்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முக்கிய ஆவணமாக மாறியுள்ள ஆதார் அட்டை அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கியில் கணக்கு தொடங்கவும், அரசின் நலத்திட்டங்களின் பலன்களை பெறவும் மிக அவசியடமாக ஆதார் உள்ளது. 

இந்த ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தபால் அலுவலகம், வங்கிகள், ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டியுள்ளது. 

தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, மொபைல்போன் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த ஆதார் ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 

'விரைவில் வருகிறது. ஆதாரில் மொபைல் எண்ணை, வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம். ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.

கட்டாயம் ஏன்..?

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை பெறவும்.
வங்கிகளில் கேஓய்சி.
வருமான வரி சரிபார்ப்பு.
டிஜிலாக்கர் மற்றும் டிஜிட்டல் சேவைகள்.
ஓடிபி மூலம் அங்கீகாரம் செய்வதற்கும் ஆதார் எண்ணில் மொபைல் எண் இணைப்பது கட்டாயம் ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A new method to update mobile number in Aadhaar card from home will be available soon


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->