வளர்ந்த பாரதம் என்ற கனவை உருவாக்க பிரதமர் மோடி முன்வைத்துள்ள முக்கிய 09 கோரிக்கைகள்..!
Prime Minister Modis 09 main demands to create a developed India
கோவா மாநிலத்திலுள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார். குறித்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது கூறியதாவது;
ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் முதன்மையான குறிக்கோள் மக்களை ஒன்றிணைப்பது தான். அயோத்தியில் ராமர் கோவிலின் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயிலின் பிரமாண்டமான மறுசீரமைப்பு ஆன்மிக பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறது சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அத்துடன், இன்றைய இந்தியா உறுதியுடனும், நம்பிக்கையுடனும் முன்னேற்றி வருகிறது என்பதை நிரூபிக்கின்றன என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதி துன்பங்களை எதிர்கொண்ட போது, மக்கள் தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு வெளியேறி புதிய நிலங்களில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, இந்த மடாலயம் சமூகத்தை ஆதரித்தது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மடாலயம் மதத்தை மட்டுமல்ல, மனித நேயத்தையும், கலாசாரத்தையும் பாதுகாத்தது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், மடத்தின் சேவை காலப்போக்கில் விரிவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இன்று, கல்வி முதல் விடுதிகள் வரை, முதியோர் பராமரிப்பு முதல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி வரை, இந்த மடாலயம் எப்போதும் அதன் வளங்களை பொது நலனுக்காக அர்ப்பணித்துள்ளது என்று பாராட்டி பேசியுள்ளார்.

77 அடி உயர ராமர் சிலை இங்கு நிறுவப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு, அயோத்தியில் உள்ள ராமர் கோவில் காவிக்கொடி ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக மோடி 09 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
01- தண்ணீரை சேமிக்க வேண்டும்.
02- மரங்கள் நட வேண்டும்.
03-தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
04-சுதேசி பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
05-நாட்டின் பல்வேறு பகுதிகளைப் புரிந்துகொள்ள நாம் பாடுபட வேண்டும்.
06-இயற்கை விவசாயத்தை நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
07- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். திணை வகை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது உணவு பயன்பாட்டில் எண்ணெயின் அளவை 10 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
08-விளையாட்டுக்கள் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
09-ஏழைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும்.
மேலும், வளர்ச்சி அடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், சமூகம் ஒன்றுபடும்போதுதான், ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைய முடியும். அப்போதுதான் இந்தியா பெரும் முன்னேற்றம் அடையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modis 09 main demands to create a developed India