வார இறுதி விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
tngovt special bus 20 11 2025
வார இறுதி விடுமுறையையொட்டி, நாளை (21-ந்தேதி), நாளை மறுநாளும் (22-ந் தேதி) சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் அதிகம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கும் பஸ்களுடன் கூடுதல் சிறப்புப் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) 340 சிறப்புப் பஸ்களும், சனிக்கிழமை (நவ.22) 350 சிறப்புப் பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை, நாளை மறுநாள் தலா 55 பஸ்கள் என மொத்தம் 110 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.
மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 20 பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.
English Summary
tngovt special bus 20 11 2025