தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை: வங்கக்கடலில் புதிய தாழ்வுப் பகுதி!
chennai imd rain alert 20 11 2025
தமிழகத்தில் இன்று தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6 நாட்களுக்குப் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நேற்று நிலவிய தாழ்வுப் பகுதி, இன்று (நவம்பர் 20) காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியை ஒட்டி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழைக்கான மாவட்டங்கள் (நவ. 21 முதல் 26)
நவ. 21: தென் மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மற்றும் கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 22 & 23: ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை நீடிக்கும்.
நவ. 24: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 25 & 26: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை தொடரும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நவம்பர் 24 அன்று, தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
chennai imd rain alert 20 11 2025