டெல்லி குண்டு வெடிப்பு: 2008 தொடர் தாக்குதலில் தேடப்பட்ட மிர்ஸா ஷாதப் பெய்க் பற்றிய தகவல்கள் வெளியீடு!
Delhi Red port car bomb blast case more info
டெல்லியில் சமீபத்தில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புத் தாக்குதல் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பின் (NIA) விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், 2008 தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தேடப்பட்ட முக்கிய நபரான மிர்ஸா ஷாதப் பெய்க் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் பல்கலையில் 2007-ஆம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற பட்டதாரி இவர்.
முக்கிய குற்றச்சாட்டுகள்:
பயங்கரவாதத் தொடர்பு: 2008-ஆம் ஆண்டு டெல்லி மற்றும் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இவருடைய பெயர் இடம்பெற்றது.
அசம்கர் தலைவர்: பெய்க், அசம்கர் என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வந்துள்ளார்.
ஆள் சேர்ப்பு: இரண்டு வெவ்வேறு பயங்கரவாதக் குழுக்களை இணைக்கும் பணிகளில் ஈடுபட்ட இவர், 2008 முதல் பல சதித் திட்டங்களைத் தீட்டியதுடன், இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தாக்குதல் பங்களிப்பு: கர்நாடகத்தில் இருந்து வெடிபொருட்களை வாங்கியது, புனேயில் நடந்த ஜெர்மனி பேக்கரி குண்டு வெடிப்பில் முக்கியத் தொடர்பு இருந்தது உள்ளிட்ட பல உண்மைகள் விசாரணையில் தெரியவந்தன.
பல ஆண்டுகளாகப் போலீஸிடம் சிக்காமல் இருக்கும் பெய்க், தற்போது பாகிஸ்தானில் வாழ்ந்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய டெல்லி தாக்குதலுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
English Summary
Delhi Red port car bomb blast case more info