#BREAKING | பவானிசாகர் அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையான பவானிசாகர் நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானிஆறு, மாயாறு கூடுமிடத்தில் அணை கட்டி, மழை காலத்தில் வரும் தண்ணீரை சேமித்து வறட்சி காலத்தில் பாசனத்துக்கு பயன்படுத்தும் பவானிசாகர் அணைத்திட்டம் 1947ம் ஆண்டு திட்டமிடப்பட்டு அணை கட்டப்பட்டது. 

இந்த அணையால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் குடிநீர் மற்றும் விவசாய பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்கான நீர் திறக்க என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் "ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர்களின் ஒத்திசைவினை எதிர்நோக்கி ஈரோடு மாவட்டம் 2023-2024 ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி திட்ட பிரதான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 23,846.40 மில்லியன்கன அடிக்கு மிகாமல் 15.08.2023 முதல் 13.12.2023 வரை 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசாணையிடுகிறது" என நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா அரசாணை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt ordered to release water from Bhavanisagar dam from August 15


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->