ஓட்டு போடலனா லீவு கட்.. அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. தமிழக அரசு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவை போதித்தேர்தலில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை தவிர அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதிதத்துடன் கூடிய விடுமுறையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் விடுப்பில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தாமல் இருந்தால் அவர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை சேர்ந்த ஊழியர்கள் உள்துறை மற்றும் மதுபான கடை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோன்று வாக்களிக்காத ஊழியர்களின் விடுப்பு கணக்கிலிருந்து ஒருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Holiday cut to govtstaff who not vote


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->