பார் இயங்கும் நேரத்தில் மாற்றம்... தமிழக அரசு பரிசீலனை... நீதிமன்றத்தில் டாஸ்மார்க் நிர்வாகம் விளக்கம்.!!
TNgovt consider tasmac bar opening hours extension
தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பார்கள் தினமும் 10 மணிக்கு வரை இயங்குவதால், 10 மணிக்கு மேல் குடிப்பவர்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா..? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டாஸ்மாக் நிர்வாக தரப்பு வழக்கறிஞர் "மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அதில் மனுதாரர் தலையிட முடியாது" என பதில் அளித்தார். மேலும் டாஸ்மாக் பார்களை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNgovt consider tasmac bar opening hours extension