#BigBreaking |  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை செப்டம்பர் 15 முதல் அமல்!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில் முக்கிய அறிவிப்பாக அமைச்சர் வெளியிட்டதால், வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

மத்திய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என்று சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில். தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Budget 2023 1000 rupee announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->