ஆசிரியர்களின் போராட்டத்திற்கு விழுந்த அடி! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


சென்னை பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகமான பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இன்று சென்னை பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகமான பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்ததோடு, பேச்சுவார்த்தை விளக்க கூட்டமும் நடைபெற்றது. 

கடந்த சில நாட்களாக அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் 4000க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடங்களில் அடைக்கப்பட்டனர். இதனால் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாகவே பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt announced that no permission to protest in dpi office


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->