தமிழகத்தில் கொளுத்தி எடுத்த வெயில்! இரவு 10 மணி 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
TN Weather Report 24 9 2024
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்த அந்த அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்,சி கடலூர், கோவை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தமிழகத்தில் ஏழு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி உள்ளது.
அதன்படி ஈரோடு, கரூர் மாவட்டம் பரமத்தி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
TN Weather Report 24 9 2024