தமிழ்நாட்டில் ஜூலை 21 முதல்.. வீடு வீடாக வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள்! காரணம் இதுதான்!!
TN voter verification will begin from July21 door to door
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்க்கும் பணி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக முழுவதும் 6,10,39,316 வாக்காளர்கள் இருந்து வரும் நிலையில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி 18 வயதி பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கும் பணி நடைபெறும்.

தற்பொழுது அந்த நிலை மாற்றப்பட்டு ஆண்டுக்கு நான்கு முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில் ஜூலை மாதத்தில் 18 வயது பூர்த்தியானால் அடுத்த ஆண்டு ஜனவரி வரை விண்ணப்பிக்க காத்திருக்க வேண்டியதில்லை. அந்த வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தகுதி பெரும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஜூலை 1ம் தேதி தகுதி நாளாகக் கொண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களாக 1,39,108 சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணியை வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN voter verification will begin from July21 door to door