தமிழின தலைவர் பிரபாகரன் பிறந்த நாளுக்கு., தமிழ் ராக்கர்ஸ் செலுத்திய மரியாதை.!! - Seithipunal
Seithipunal


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாளான இன்று, உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அவரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். 

இலங்கையின் வல்வெட்டித்துறை எனும் ஊரில் 1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்கள் பிறந்தார். இவரின் தந்தை பெயர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயின் பெயர் பார்வதி அம்மாள். 

அவரின் பிறந்த நாளான இன்று உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இலங்கை நாட்டின் புலம்பெயர் தமிழ் மக்களும், மற்ற நாடுகளில் உள்ளவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி  யாழ் பல்கலைக்கழக வளாகத்திலேயே கொண்டாடியுள்ளனர். மேலும், அவரின் பல சிந்தனைகள் அடங்கிய சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ் திரை உலகில் திரை அரங்கில் வெளியாகும் திரைப்படங்களை, வெளியிட்ட அன்றே இணையதளத்தில் வெளியிட்டு, தமிழ் திரை துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரின் புகைப்படத்தை வெளியிட்டு, ''தமிழ் தேசிய தலைவருக்கு, எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்றும், ''தமிழர் எழுச்சி நாள்'' என்றும் பதிவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN ROCKERS CELEBRATE TO VELUPILLAI PREBAKARAN BIRTHDAY


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->