எம்.ஆர்.பி தேர்வு எழுதி பாஸ் ஆனால் பணி நிரந்தரம் குறித்து முடிவு..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்திய மாற்றுத்திறனாளிக்கான வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 15 பேருக்கு பணிபுரிவதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "மாற்றுத்திறனாளிகள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் நிலையில் இல்லாத சூழலை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்வர் காப்பீடு திட்டத்துடன் உயிர் காப்போம் திட்டத்தையும் இணைத்துள்ளோம் இந்த திட்டத்தின் மூலம் 116 கோடி ரூபாய் செலவில் 1.17 லட்சம் பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். மக்கள் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 98.35 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது இயலாத காரியம் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

கடந்த ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்களை விருப்பத்திற்கு ஏற்றார் போல் அதிக அளவில் எடுத்துள்ளனர். இது ஒப்பந்த பணியாளர்களுக்கும் தெரியும் இருந்தாலும் போராடிப் பார்க்கலாம் என போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் எம்ஆர்பி தேர்வு எழுதி பாஸ் ஆனால் பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு முடிவு எடுக்கும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN health minister said after MRB exam pass they will be permanent


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->