தமிழகத்தில் ஒரு மாணவர் கூட பயிலதா 207 பள்ளிகள் இழுத்து மூடப்படுகிறதா? அமைச்சர் சொன்ன விளக்கம்!
TN Govt School Issue Minister
முன்னதாக பிரபல நாளேடு ஒன்று தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கூட பயிலதா 207 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் 207 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக வெளிவந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெளிவுபடுத்தினார்.
மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், எந்த சூழலிலும் பள்ளிகள் மூடப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற புதிய முயற்சியை தொடங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகின்றன.
English Summary
TN Govt School Issue Minister