ஊழியர்களுக்கு பொன்னாசை வாரி வழங்கிய ஓபன் ஏஐ நிறுவனம் - நடந்தது என்ன?
open ai company announce bonuses increase to employees
உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக், கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஏஐயில் புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகின்றன. இந்தப் போட்டிக் காரணமாக, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் டெக் ஊழியர்களை தங்கள் நிறுவனங்களுக்கு இழுக்க முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
அதாவது, மெட்டா, குரோக் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்கள் அதிக ஊதியம் கொடுத்து பணியாளர்களை ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில், ஓபன் ஏஐ நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக ஆயிரம் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனசாக கொடுத்துள்ளது. இதனால், ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனனர்.
English Summary
open ai company announce bonuses increase to employees