மழைக்காலத்தில் வரும் ஈசலில் இத்தனை நன்மைகளா?
benefits of white ants
மழைக் காலங்களில் அதிகளவில் காணப்படும் ஒரு பூச்சி வகை தான் ஈசல்கள். இது கரையான் கூடுகளில் இருக்கும் முட்டையில் இருந்து பிறந்து வளருகிறது. இந்த ஈசல்கள் சில நாடுகளில் சுவையான சத்தான உணவாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்த ஈசலை எப்படி செய்து சாப்பிடுவது, ஈசல்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளன மற்றும் எந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். முதலில் ஈசலை பிடித்து அதன் இறக்கைகளை நீக்கிவிட்டு ஒரு வாணலில் போட்டு வறுத்து அதனை பொடியாக்கி பயன்படுத்தலாம்.
ஈசலில் எந்த இறைச்சியிலும் காணப்படாத அளவுக்கு அதிக புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.
இது மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு, இதய பலவீனம், மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம், பக்கவாதம், முக வாதம் ஆகியவற்றிற்கு அரு மருந்தாக பயன்படுகிறது.