ஏழு நாள் இயற்கை முக பராமரிப்பு திட்டம்...! ட்ரை பண்ணி பார்த்தா அசந்து போவீங்க...!
Seven day natural facial care plan Try it and youll be amazed
7 நாள் இயற்கை முக பராமரிப்பு திட்டம்
Day 1 மஞ்சள் + தயிர் பிரகாச பாகம்
1 ஸ்பூன் தயிரில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.முகத்தில் சமமாக தடவி 15 நிமிடம் வைத்திருந்து, சாதாரண தண்ணீரால் கழுவவும்.முகம் உடனே fresh & bright ஆகும்.
Day 2 – தேன் + எலுமிச்சை கறை நீக்கம்
1 ஸ்பூன் தேனில் ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும்.Dark spots, pigmentation குறையும்.

Day 3 – வெள்ளரிக்காய் குளிர்ச்சி மாஸ்க்
வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும்.15 நிமிடம் வைத்திருந்து கழுவவும்.முகத்தில் குளிர்ச்சி, ஈரப்பதம் கிடைக்கும்; கருவளையம் குறையும்.
Day 4 – பப்பாளி மென்மை மாஸ்க்
பழுத்த பப்பாளியை நசுக்கி முகத்தில் தடவவும்.20 நிமிடம் கழித்து கழுவவும்.Dead cells நீங்கி, தோல் மென்மையாகும்.
Day 5 – ஓட்ஸ் + பால் Scrub
1 ஸ்பூன் ஓட்ஸ், தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.மெதுவாக முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து கழுவவும்.Dead skin, excess oil நீக்கும்.
Day 6 – ஆலோவேரா ஹைட்ரேஷன்
ஆலோவேரா ஜெல் முகத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும்.குளிர்ந்த தண்ணீரால் கழுவவும்.முகம் ஈரப்பதமுடன் ஆரோக்கியமாகும்.
Day 7 – முழு முக steam + ரோஸ் வாட்டர்
சூடான நீரின் ஆவியை 5 நிமிடம் முகத்தில் விடவும்.அதன் பின் ரோஸ் வாட்டர் காட்னில் எடுத்து முகத்தில் தடவவும்.தோல் துளைகள் சுத்தமாகும், fresh look வரும்.
English Summary
Seven day natural facial care plan Try it and youll be amazed