அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கை அனைத்தும் செய்து தரப்படும்...! - இபிஎஸ்
Once AIADMK government is formed demands farmers fulfilled EPS
அதிமுக பொதுச் செயலாளர் ''எடப்பாடி பழனிசாமி''," மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" எழுச்சிப் பயணம் மேற்கொண்டார்.இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தனியார் விடுதியில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை விவசாயிகளோடு உரையாடினார்.அங்கு பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர் பிறகு தெரிவித்ததாவது,"அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவ்வப்போது விவசாயிகளை சந்தித்து பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம்.

விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கினோம். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார்கள். விளைநிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும், அதற்கு உரிய இழப்பீடு வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள்.
யானை போன்ற விலங்குகள் வயலில் புகுந்து சேதம் விளைவிப்பதுடன் விவசாயிகளை தாக்கி வருவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். யானை நடமாட்டத்தை தடுக்க மின் வேலி அமைப்பது, அகழி வெட்டுவது போன்ற பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டன.இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகமாக இருந்தால் விலை வீழ்ச்சி அடைந்து இங்குள்ள மா விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்தனர்.
அவர்களுக்கு 1 ஏக்கருக்கு 30 ரூ.1000 இழப்பீடு வழங்க வேண்டும், ஒரு கிலோவுக்கு ரூ.13 வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிமுக போராட்டமே நடத்தியது. மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த்தும் பரிசீலனை செய்யும்.ஒசூரில் மலர்களை விற்பனை செய்யும் வகையில் சர்வதேச மலர் ஏல மையத்தை 20 கோடியில் கட்டினோம். அதை கடந்த ஆண்டுதான் இந்த அரசு திறந்துள்ளது.
ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மலர் ஏல மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவோம்.நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது பால் பண்ணைக்குச் சென்று பார்வையிட்டேன். ஒரே இடத்தில் 1,35,000 லிட்டர் பாலை உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளுக்கு வழங்கி வந்தனர் அங்கு ஒரு பசு 65 லிட்டர் வரை பால் கொடுக்கிறது.
அதையெல்லாம் கவனித்து நம் பகுதி விவசாயிகளுக்கு கலப்பின மாடுகளைக் கொடுப்பதற்கு பிரம்மாண்டமான கால்நடை பூங்கா அமைத்தோம். எனக்கு விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தெரியும். அவர்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதுதான் எங்கள் முக்கிய பணியாக இருக்கும்’’ என்று உறுதி அளித்துள்ளார்.இதற்கு பலரும் சந்தோஷம் அடைந்தனர்.சட்ட மன்ற தேர்தல் நெருங்க நெருங்க பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
English Summary
Once AIADMK government is formed demands farmers fulfilled EPS