இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் பணி மாற்றம் - தமிழக அரசு!
TN Govt order 07022023
நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக கண்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தற்போது இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையரக இருந்தார்.
இதுகுறித்து இன்று தமிழக தலைமை செயலாளர் இறையன்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக கண்ணன் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுவிக்கப்படுகிறார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில முக்கிய செய்திகள் : ஆந்திராவிலிருந்து கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முதன்மைச் செயலாளருக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக பணிசெய்த 24 வடமாநில சிறுவர்களை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மீட்கபட்ட சிறுவர்களை ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.