#Breaking:: இனி இலவச திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ₹20,000 லிருந்து ₹50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவினத் தொகை ரூபாய் ஒரு கோடி திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் கடந்த ஜூலை 18ஆம் தேதி ஆணையிடப்பட்டது. 

இந்த நிலையில் இந்து சமய அறநிலை துறை சார்பில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு அனுமதிக்கப்பட்ட திட்ட செலவினை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி திருக்கோயில் நிதி மூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துறையின் ஆணையருக்கு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமக்கள் ஆடைகள் ரூ.3000, திருமணத்திற்கு இரு வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2000  மற்றும் சீர்வரிசை பாத்திரங்கள் உட்பட அனைத்து செலவினங்களும் சேர்த்து ரூ.50,000 வழங்க இந்து சமய அறநிலை துறை ஆணையரின் கருத்தை அரசு கவனமுடன் பரிசீலை செய்தது, பரிசீலனுக்கு பின்னர் அதனை ஏற்று திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்படுவதால் ஒரு இண இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவின தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசாணையிடுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt issued GO Rs50000 for TNHRCE free marriage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->