பேருந்து கட்டணம் ஏறவே ஏறாது - அமைச்சர் சிவசங்கர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களின் கூட்டம், போக்குவரத்துத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து கழகங்கள் சார்பாக ஒரு வாட்ஸ்ஆப் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில், பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய குற்றச்சாட்டின் எதிரொலியாகவும், பேருந்து நடத்துநர்களும் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக வந்த தகவல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பெண்கள் இலவசமாக பயணிப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். பெண்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது என்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மேலாண் இயக்குநர்கள், கிளை மேலாளர்களின் மூலம் அறிவுரை வழங்குவார்கள். 

பேருந்து பயணசீட்டு கட்டணம் ஏறவே ஏறாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். பக்கத்து மாநிலங்களில் டீசல் விலை ஏறும்போதெல்லாம் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது. சில மாநிலங்களில் போக்குவரத்துகழகங்களே கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டண விகிதமே தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government transport department meeting minister sivasangar press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->