அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் திடீர் மாற்றம்! சிக்கலான அந்த நாலரை, ஐந்தரை?! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வரும் 2023-24 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணி தொடங்கியுள்ளது. வழக்கம் போல் ஐந்து வயது பூர்த்தியான அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கு உண்டான பணிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நடைபாண்டில் புதிய மாற்றமாக பள்ளி மாணவர்களின் சேர்க்கை வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து வெளியான தகவலின் படி, அரசு பள்ளிகளில் ஐந்து வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் கடந்த காலங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், தற்போது ஐந்து வயது நிரம்பாத (செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பிறந்த - நாலரை வயது குழந்தைகளையும்) ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு உண்டான அனுமதி பள்ளி கல்வித்துறையில் கிடைத்துள்ளதாக தெரிய வருகிறது.

மாணவர் சேர்க்கை என்பது மே, ஜூன், ஜுலை மாதங்களில் நடைபெறும். இந்த 3 மாதத்தில் ஒரு குழந்தை பிறந்தால் ஐந்து வயதில் மாணவர் சேர்க்கைக்கு கணக்கீடு சரியாக இருக்கும். அதே சமயத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கு நாலரை வயது ஆகும் என்பதால், அவர்கள் ஐந்தரை வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வந்தார்கள்.

அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதன்படி செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பிறந்த குழந்தைகளையும் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு உண்டான அனுமதி கிடைத்து, அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மாற்றத்தை 90களில் பிறந்தவர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். காரணம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பிறந்த தங்களது பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியை குறிப்பிடாமல், அவர்கள் ஜூன் மாதத்தில் ஏதோ ஒரு தேதியில் பிறந்ததாக ஆசிரியர்களே பொய்யாக மாற்றி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டனர். இதனால் அவர்கள் தங்களுடைய பிறப்பு சான்றிதழில் பெயர் தேதியை மாற்றுவதற்கு, வழக்கறிஞர், கோர்ட், செய்தித்தாள் என்று படாத பாடுபட்டவர் ஏராளம். 

இப்படி செய்வது தவறு, இப்போது இதுபோல் யாரும் செய்வதில்லை. இருப்பினும் பெற்றோர்கள் கவனமாக இருங்கள். பிறந்த தேதியை மாற்றி மாணவர் சேர்க்கை கூடாது. பிற்காலத்தில் பல சிக்கல்கள் வரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Government school Admissions  Age issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->