திருச்சி : பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து - 20 பேர் காயம்.!
TN Government bus overturned in ditch 20 injured in Trichy
பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று நாற்பதொன்பது பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி அருகே உள்ள மஞ்சகோரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள ஒரு வளைவில் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றுள்ளார். அதில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஆனால், இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பேருந்தில் இருந்த நான்கு சிறுவர்கள் உட்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
TN Government bus overturned in ditch 20 injured in Trichy