தமிழகத்தில் அமைதியான சூழல், சீரான சட்டம் ஒழுங்கு - TVS குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் புகழாரம்! - Seithipunal
Seithipunal


சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள், 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் பல துறைகளில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். தமிழன் என்ற முறையில் நான் பெருமையாக இதை சொல்கிறேன் என்று, முதலீட்டாளர்கள் மாநாட்டில் TVS குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார்.

மேலும், "நாட்டின் பல துறைகளில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். தமிழன் என்ற முறையில் நான் பெருமையாக இதை சொல்கிறேன்.

எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்தை அடைந்துள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில்துறையில் தொடர்ந்து மிளிரும் என நம்புகிறேன்.

 

அமைதியான சூழல், சீரான சட்டம் ஒழுங்கு, திறமையான பணியாளர்கள் இருப்பதால் பல சர்வதேச நிறுவனங்களின் இலக்காக தமிழ்நாடு இருக்கிறது" என்று TVS குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

முன்னதாக தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்பதற்காக காணொளி வாயிலாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும், மின்வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GIM 2024 TVS Venu Srivasan speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->