விழுப்புரத்தை உலுக்கிய சம்பவம்... அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு.!!
TN DGP Sylendrababu orders transfer AnbuJyoti Ashram case to CBCID
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த திருப்பூரைச் சேர்ந்த ஜபருல்லாஹ் என்பவரை சந்திக்கச் சென்ற உறவினர்களால் ஆசிரமத்தில் இருந்த பலர் காணாமல் போன உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

ஜவஹருல்லா உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் அன்புஜோதி ஆசிரமம் முறைகேடாக அனுமதியின்றி நடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட பலர் காணவில்லை என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ஆசிரம நிர்வாகிகள் ஜூபின் மற்றும் அவருடைய மனைவி மரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், அவரது மகன் முத்து விநாயகம், புதுவையைச் சேர்ந்த நடராஜன், விழுப்புரத்தைச் சேர்ந்த காளிதாஸ், தஞ்சையை சேர்ந்த பத்மா ஆகியோர் காணவில்லை என நேற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் ஆசிரம நிர்வாகிகள் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அன்புஜோதி ஆசிரமம் மீது அடுத்தடுத்து புகார் எழுந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN DGP Sylendrababu orders transfer AnbuJyoti Ashram case to CBCID