சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு உதவ தகவல் உதவி மையங்கள் ஏற்பாடு!
TN devotees Sabarimala temple minister sekar babu
தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 27.12.2025 வரையும், மகர விளக்கு ஜோதி திருவிழா 30.12.2025 முதல் 19.1.2026 வரையும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.1.2026 வரை செயல்படும்.
சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 9488073779, 948627 0443, 9442872911 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும் அலுவலர்களின் செல்போன் எண்களிலும் தொடர்புகொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
2.12.2025 வரை சிவக்குமார்-94439 94342, பிரேம் குமார்-6385806900, சந்தீப் குமார்-8531070571, 3.12.2025 முதல் 17.12.2025 வரை சேர்மராஜா-83440 21828, லால்கிருஷ்ணன்-70949 06442, சதீஷ்குமார்-75588 39969, 18.12. 2025 முதல் 2.1.2026 வரை சுந்தர்-89219 37043, சிவசங்கர்-9080650431, சஜ்ஜீவன்-99405 76898, 3.1.2026 முதல் 20.1.2026 வரை வெங்கடேஷ்-98433 70229, சுதாகர்-99425 05466, ரமேஷ்-84384 44770" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN devotees Sabarimala temple minister sekar babu