#Breaking: தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஐந்தாவது முறையாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதியான நாளையுடன் நிறைவடையவுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475 ஆக  உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்ததன் எதிரொலியாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

கடந்த சில வாரமாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூன் 28 ஆம் தேதியான நேற்றைய நிலவரப்படி தமிழகத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 86,224 ஆக உயர்ந்துள்ளது. பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 47,749 ஆக இருந்தது.. மேலும், மொத்த பலி எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் வீரியம் காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படலாம் என்று எதிர்பார்த்தது. ஆனால், இன்று காலை முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு, ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக எந்த விஷயமும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை தற்போதைய ஊரடங்கு அப்படியே நீட்டிப்பு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Corona amid extend 31 July 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->