கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்: கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் உயர்த்தித் தமிழக அரசு செய்தி வெளியீடு!
TN Cooperative Dept Increases Jewel Loan Limit to 10000 Per Gram Rationalizes Interest Rates
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமிற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்கக் கூட்டுறவுத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடன் அளவு உயர்வு: நகைக்கடன்களுக்கு (Jewel Loan) ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ.10,000/- வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என உயர்த்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய நிலவரம்: கடந்த ஆண்டில் தங்கத்தின் சந்தை மதிப்பில் கிராமிற்கு அதிகபட்சமாக ரூ.7,000/- வரை அல்லது 75% கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எல்லை உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி விகிதத்தில் சலுகை & சீரமைப்பு:
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) இடையே நிலவி வந்த வட்டி வேறுபாடுகளைச் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக்கடன் வட்டியை விட, PACCS-க்கு DCCB விதிக்கும் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும்.
PACCS-ன் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாருக்குப் பொருந்தும்: இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டுத் தற்போது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக்கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும்.
English Summary
TN Cooperative Dept Increases Jewel Loan Limit to 10000 Per Gram Rationalizes Interest Rates