ச்சீ…. இது த்தூ…ய சக்தி! தேடப்படும் குற்றவாளி முதல்வருக்கு மாட்டு வண்டி ஓட்டினாரா? அதிமுக கடும் கண்டனம்!
admk condemn to tvk govt cm vijay
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தோல்வி பயத்தில், தேர்தலை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள வக்கில்லாத இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, அதிமுகவை குறிவைத்து செய்யும் சித்து வேலைகள் கேவலத்தின் உச்சம்.
பொட்டிக்காபாளையத்தைச் சேர்ந்த கழக பொறுப்பாளர் அசோக் என்பவரை, தவெக வேட்பாளர் சத்தியபாமா-வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வழக்கு பதிவு செய்கிறது இந்த அரசு.
இந்த வழக்கில், மற்றவர்கள் எல்லோரையும் கைது செய்துவிட்டு, அசோக்கை மிரட்டி பணிய வைத்து, விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்ட வைத்திருக்கிறார்கள்.
முதல்வர் தலைமையில் உள்ள காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி என்று இருக்கும் ஒருவர், முதல்வருக்கு மாட்டு வண்டி ஓட்டினாரா?
இது என்ன சட்டம்? இது என்ன ஜனநாயகம்?
MLA-க்களை திருடுவது,
மாவட்டச் செயலாளரை கைது செய்து மிரட்டுவது,
கட்சி நிர்வாகிகளை வழக்கு காட்டி மிரட்டி கட்சி மாற வைப்பது,
இது தான் தூய சக்தி?
ச்சீ…. இது த்தூ…ய சக்தி !
English Summary
admk condemn to tvk govt cm vijay