வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைத்ததாக வழக்கு; முதல்வர் விஜய் தரப்பில் மறுப்பு; விசாரணை நாளை தள்ளி வைத்துள்ள உயர்நீதிமன்றம்..!
CM Vijays side denies allegations in the High Court regarding the concealment of asset details in the nomination papers
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தொடங்கியுள்ளார்.
முதல்வர் விஜய் தரப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி வாதிட்ட வழக்கறிஞர், வேட்புமனுவில் விஜய் தனது சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படியும் இல்லை என்று வாதிட்டார்.
இந்நிலையில், அவரது வாதம் முடிவடையாததை அடுத்து, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரிய முதல்வர் விஜய்யின் மனுக்களின் விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
English Summary
CM Vijays side denies allegations in the High Court regarding the concealment of asset details in the nomination papers