"10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!": டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு — டிசம்பர் 20-ல் தேர்வு!
TNPSC Group-4 Notification to be Released Tomorrow Exam on Dec 20 with 10000 Expected Vacancies
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (அக்டோபர் 6) வெளியிடப்பட உள்ள நிலையில், இத்தேர்வு வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்வு விவரங்கள்:
தேர்வு & அறிவிப்பு தேதி: 2026-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிக்கை நாளை (அக்டோபர் 6) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகிறது. தேர்வு டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,000+ காலிப்பணியிடங்கள் எதிர்பார்ப்பு:
வழக்கமான கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் ஆகிய பணியிடங்கள் இதில் அடங்கும்.
பல்கலைக்கழகங்கள், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் சமீபத்தில் சேர்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளின் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) குரூப்-சி பணியிடங்களும் இதன் கீழ் நிரப்பப்படுவதால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000-க்கும் அதிகமாக இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித் தகுதி: பெரும்பாலான பணியிடங்களுக்குப் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி அடிப்படைத் தகுதியாகும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்குக் கூடுதல் தொழில்நுட்பத் தேர்ச்சி அவசியமாகும்.
15 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு: பத்தாம் வகுப்பு அடிப்படைத் தகுதி என்பதால், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் பெருமளவில் போட்டியிடும் இத்தேர்வுக்கு இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TNPSC Group-4 Notification to be Released Tomorrow Exam on Dec 20 with 10000 Expected Vacancies