'இடைத்தேர்தலுக்காக ஜிபே மூலம் தவெக பணம் அனுப்பியதற்கு ஆதாரம் இருந்தால் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம்'; மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி..!
Minister Ramesh hits back at the Marxist partys allegation that TVK sent money via GPay for the byelection
இடைத்தேர்தலில் தவெக சார்பில் ஜிபே மூலம் வாக்காளர்களுக்கு பணம் அனுப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தி இருந்த நிலையில், அதற்கு ஆதாரம் இருந்தால் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை ரமேஷ் பதிலளித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது மேலும் கூறியதாவது;
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 2,052 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக மோதிரங்கள் வழங்கியதில் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாராபுரம் தொகுதியில் களத்தில் இறங்கி வேலை பார்த்துள்ளதாகவும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்கு சேகரித்ததாகவும், அனைத்து மக்களும் தவெகவுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க தயாராகிவிட்டனர். மக்களிடம் எதிர்ப்பு மனநிலை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக, அதிமுகவினரே கட்சிக்காரர்களை வைத்து தவெக வேட்பாளர் செல்லும் இடங்களில் எதிர்ப்பு கோஷம் போட வைக்கின்றதாகவும், மக்களிடம் எதிர்ப்பு மனநிலை இருப்பதுபோல கட்டுக்கதையை கட்டமைக்கின்றனர் என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஜி-பே மூலம் தவெவினர் பணம் அனுப்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளாரே?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே நாங்கள் யாருக்கும் பணம், பரிசுப் பொருள் என எதுவும் கொடுக்காமல் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த இந்த இடைத்தேர்தலில் பணம் வழங்கியதற்கான ஆதாரமிருந்தால் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். நாங்கள் நேர்மையாக இடைத்தேர்தலை சந்திக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Minister Ramesh hits back at the Marxist partys allegation that TVK sent money via GPay for the byelection