தமிழகத்தில் முழு ஊரடங்கு?! தமிழக முதல்வர் ஆலோசனை! வெளியான பரபரப்பு செய்தி!  
                                    
                                    
                                   tn cm meeting in sep 29
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் வரும் 30-ம் தேதியுடன் எட்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. இதனையடுத்து அடுத்த கட்டமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது இதே நிலை நீடிக்குமா என்பது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பொது முடக்கம் அவசியம் இல்லை என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அண்மையில் செய்தியாளர்களுக்கு தெரிவித்திருந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு முன்பை விட தற்போது குறைந்து வரும் நிலையில், பொது முடக்கம் தேவையில்லை என்று பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு செல்லலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் 29-ஆம் தேதி தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன், தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. இந்த கூட்டத்துக்கு பின் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா? அல்லது ஊரடங்கு நீக்கபடும்மா என்று தெரியவரும்.