போர் பதற்றம் தாக்கம்: இன்று தங்க விலையில் சிறுது சரிவு...! இன்றைய விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதால் உலக சந்தைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சர்வதேச நிலைமை முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

இதன் தாக்கமாக தங்கத்தின் விலை திடீர் ஏற்றத்தை சந்தித்துள்ளது.வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய சந்தைகள் செயல்படாததால் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படாது.

ஆனால் இந்த முறை போர் பதற்றத்தின் காரணமாக சந்தை விடுமுறை நாளாக இருந்தபோதிலும் தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு பதிவானது.முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.15,550-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,400-க்கும் விற்பனையாகியது.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.225 மற்றும் சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,775-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் சென்றது.இந்நிலையில் இன்று சென்னை நகரில் விலையில் சரிவு காணப்பட்டது.

22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கும், கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் தளர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.315-க்கும், பார் வெள்ளி ரூ.3,15,000-க்கும் விற்பனையாகிறது.
கடைசி சில நாள் தங்கம் விலை நிலவரம் (22 கேரட்):
01-03-2026 – ரூ.1,26,200
28-02-2026 –ரூ.1,24,400
27-02-2026 – ரூ.1,19,200
கடைசி சில நாள் வெள்ளி விலை நிலவரம்:
01-03-2026 – ரூ.325
28-02-2026 –ரூ.320
27-02-2026 – ரூ.295
சர்வதேச அரசியல் பதற்றம் தொடர்ந்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மேலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என சந்தை வட்டாரங்கள் கணிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Impact war tension Slight decline gold prices today What price situation today


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->