பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் - தமிழக முதல்வர் உறுதி.! - Seithipunal
Seithipunal


பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது தமிழக முதல்வர் பேசுகையில், " திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை மு.க ஸ்டாலின் செய்து வருகிறார். மு.க ஸ்டாலின் எந்த பிரச்சாரம் செய்தாலும், எங்களை வீழ்த்த முடியாது. 

இங்குள்ள முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ள பழனியில் அதிமுகவிற்கு மாபெரும் கூட்டம் உள்ளது. இந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு தேர்தல் வெற்றிவிழா போல தோன்றுகிறது. இதனை நான் வெற்றிவிழா கூட்டமாகவே நான் கருதுகிறேன். 

அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும். பழனி மாவட்டமாக மாறிவிட்டால் பழனி மற்றும் அதனை உள்ளடக்கியுள்ள கிராம, நகர பகுதிகள் விரைவில் பெரும் வளர்ச்சியை பெரும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Election Campaign Announce Make Palani Separate District TN Election 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal