" திராவிடச் சிறுத்தை திருமாவளவன் " என குறிப்பிட்டு தமிழக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து.!
TN CM DMK MK Stalin Wish to Birthday VCK Thirumavalavan MP 17 Aug 2021
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பிக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதியான இன்று பிறந்தநாள் ஆகும். இன்றைய நாளில் அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், " திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் நடிகர் கமல் ஹாசன் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தமிழ்ச் சமூகத்திற்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க! " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி தயாநிதி மாறன் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " இன்று பிறந்தநாள் காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
TN CM DMK MK Stalin Wish to Birthday VCK Thirumavalavan MP 17 Aug 2021