43 ஆண்டுகள் சிறைவாசம்..104 வயதில் நிரபராதி..நடந்தது என்ன?
43 years in prison what happened at 104 years of age?
கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 104 வயது முதியவர், 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்று நமது முன்னோர்கள் வாய்மொழியாக சொல்வதை நாம் கேட்டிருப்போம்.அப்படி ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.104 வயது முதியவர், 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கவுரே கிராமத்தைச் சேர்ந்த லகான் என்பவர் 1977 ஆம் ஆண்டு இரு குழுக்கள் இடையே நடந்த மோதலின் போது பிரபு சரோஜ் என்ற நபரைக் கொன்ற வழக்கில் மூவருடன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து 1982 ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தால் லக்கானும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு குற்றவாளிகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.அப்போது மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, சக குற்றவாளிகளில் மூவர் இறந்துவிட்டனர்.
இதனால் நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணையை முடித்து, மே 2 அன்று லகான் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி அவரை விடுவித்தது. 43 ஆண்டுகளுக்கு பிறகு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட லகான், கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து விடுதலையாகி தனது மகள் வீட்டிற்குச் சென்றார்.
English Summary
43 years in prison what happened at 104 years of age?