மாணவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
Students should be treated kindly Advice from the district collector to the officials
பெற்றோர்களையும் மாணவர்களையும் அதிக நேரம் காக்க வைக்காமல் அவர்கள் கேட்கும் சான்றிதழ்களை பரிசீலித்து வழங்குமாறும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கேட்டுக் கொண்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகின்ற 3-சனிக்கிழமைகளில் அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனின் உத்தரவின் பேரில் குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் மூலம் வழங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் அந்த மூன்று சனிக்கிழமைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வில் பேசிய ஆட்சியர் அவர்கள் குறிப்பிட்ட மூன்று சனிக்கிழமைகளிலும் வட்டாட்சியர் / தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்பதாரர்கள் அமர்வதற்கு தேவையான இருக்கைகள், குடிநீர் வசதி, போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்கள். மேலும் பெற்றோர்களையும் மாணவர்களையும் அதிக நேரம் காக்க வைக்காமல் அவர்கள் கேட்கும் சான்றிதழ்களை பரிசீலித்து வழங்குமாறும் மேலும் வரும் பொது மக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.எனவும் ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் இந்த மூன்று சனிக்கிழமைகளை தவிர மற்ற தினங்களில் தாலுக்கா அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் மனுக்களை பெறும் போது கிராம நிர்வாக அதிகாரி (VAO) அவர்கள் அவர்களுக்கு தேதியிட்ட ( Acknowledgment) ஒப்புகை சீட்டை அளிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் குறித்த தினங்களுக்குள் அவர்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இது உதவும் எனவும் மேலும் வரும் பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதி, குடிநீர் வசதி. மின்விசிறி வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தருமாறும் ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மேலும் குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்லும் படியும் பொது மக்களை எவ்விதத்திலும் காக்க வைக்காமல் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். மாணவர்களின் நலனுக்காகவும், கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்கள்.
English Summary
Students should be treated kindly Advice from the district collector to the officials